35 ஆக்சிஜன் ஆலைகளை திறந்து வைத்த பிரதமர் மோடி..!

Default Image

இன்று உத்தரகாண்ட் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி 35 ஆக்சிஜன் ஆலைகளை திறந்து வைத்தார்.

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 35 ஆக்சிஜன் ஆலைகளை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மண்சுக் மண்டாவியா, உத்தரகண்ட் ஆளுநர் குர்மித் சிங், முதல்வர்புஷ்கர் சிங் தாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பி எம் கேர்ஸ் நிதி மூலமாக இதுவரை 1224 ஆக்சிஜன் ஆலைகள்  தொடங்கப்பட்டுள்ளது. அவற்றில் 1100 ஆலைகளில் நாளொன்றுக்கு 1750 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தயாரிக்கும் வகையில் இயங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்