சென்னை: கடவுளின் வேலையை செய்ய என்னை அவர் பூமிக்கு அனுப்பியுள்ளார் என பிரதமர் மோடி ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
நாடளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. மொத்தமுள்ள 7 கட்ட தேர்தலில் 5 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. மீதம் 2 கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தேசிய தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி நேரடி மேடை பிரச்சாரத்துடன் தொலைக்காட்சி நேர்காணல் மூலமும் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார்.
அண்மையில் தனியார் தொலைக்காட்சி (News18) ஒன்றில் பேட்டியளித்த பிரதமர் மோடி தனது பிறப்பு பற்றி பேசியுள்ளார். அதில், நான் எல்லா மனிதர்களை போலவும் சாதாரணமாக (உயிரியல் ரீதியாக) பிறக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
மேலும், ஒரு பணியை நிறைவேற்ற கடவுளால் அனுப்பப்பட்டுள்ளேன் என்றும் , கடவுள் அவருடைய வேலையை செய்வதற்காக தன்னை இந்த பூமிக்கு அனுப்பி என் மூலம் அந்த செயல்களை செய்கிறார். அதனால் நான் இந்த ஆற்றலை பெற்றுள்ளேன் என்றும் பிரதமர் மோடி அந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
என் தயார் உயிரோடு இருக்கும் வரையில், நான் என் தாய் மூலம் தான் வந்துள்ளேன் என தெரிவித்து இருந்தேன். ஆனால் அவரின் இறப்புக்கு பிறகு நான் பல விஷயங்களை சிந்தித்து பார்த்தேன். சிலர் நான் கூறியதற்கு எதிராக பேசலாம். ஆனால் நான் இதனை முழு மனதாக நம்புகிறேன் என பிரதமர் மோடி நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…