தொடங்கியது ஜி20 மாநாடு.! அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி.!
இந்தோனீசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அமெரிக்க அதிபர் மற்றும் பிரான்ஸ் அதிபரை சந்தித்து கைகுலுக்கினார்.
இந்தோனேசியாவிலுள்ள பாலியில் இன்று (நவம்பர் 15) மற்றும் நாளை (நவம்பர்16) நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார்.
ஜி20 உறுப்பினர்களான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில் , கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரிபப்ளிக் ஆஃப் கொரியா, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 20 நாடுகளைச்சேர்ந்த தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டின் கருவாக “ஒன்றாக மீட்போம், வலுவாக மீட்போம்” என்ற கருப்பொருளின் கீழ் உலகளாவிய அளவில் முக்கிய பிரச்சினைகள் குறித்து உலகத்தலைவர்கள் பேச உள்ளனர்.
ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ-பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோரை சந்தித்து கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதன் பிறகு மாநாடு துவங்கியது.