நேற்றிரவு தனது தாயாரை சந்தித்த பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி தனது தாயாரிடம் ஆசி பெற்று காந்திநகரில் அவருடன் இரவு உணவு அருந்தினார். கொரோனா பெரும் தொற்று காரணமாக இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு பிரதர் மோடி தனது தாயை சந்தித்தார். மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டில் ஹிராபென் வசித்து வருகிறார். காந்திநகர் புறநகரில் உள்ள ரெய்சன் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு பிரதமர் மோடி சென்றார்.
குஜராத்தில் தனது வேலைகளை முடித்துவிட்டு இரவு 9 மணியளவில் பிரதமர் மோடி தாயை சந்தித்தார். தனது தாயாரிடம் ஆசீர்வாதம் வாங்கிய பிரதமர், அவருடன் இணைந்து இரவு உணவு சாப்பிட்டார். பிரதமர் மோடி தனது தாயாரை சந்திக்க வந்த போது, அவரை பார்க்க அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கூடினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025