உ.பி-யில் கிராமப்புற குழாய் குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி.!
உ.பி-யில் கிராமப்புற குழாய் குடிநீர் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று 11.30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டுகிறார் .
உத்திரப்பிரதேசத்தின் விந்தியா பிராந்தியத்தின் மிர்சாபூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களில் ‘ஜல் ஜீவன்’ மிஷனின் கீழ் 23 கிராமப்புற குழாய் குடிநீர் திட்டங்களுக்கு இன்று காலை 11.30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டுகிறார் .
ரூ.5,555.38 கோடி மதிப்பிலான இந்த திட்டங்கள் மூலம் 2,995 கிராமங்களை சேர்ந்த அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் வீட்டு குழாய் நீர் இணைப்புகளை வழங்குகிறது.இதனால் சுமார் 42 லட்சம் மக்கள் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை பெற்று பயனடைவார்கள்.வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி இந்நிகழ்வில் உரையாட உள்ளார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சோன்பத்ராவில் உள்ள சத்ரா மேம்பாட்டு தொகுதியின் கர்மோன் கிராம பஞ்சாயத்திலிருந்து பங்கேற்கவுள்ளார்.