பிரதமர் மோடி வாரணாசியில் ரூ.614 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டத்தை தொடக்கி வைக்கிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில், ரூ.614 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களை, காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார். இந்நிகழ்வில், உத்திரபிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் கலந்து கொள்கிறார். மேலும், பிரதமர் மோடி தசாஸ்வமேத் காட் மற்றும் கிட்கியா காட் ஆகியவற்றின் மறுவடிவமைப்புக்கும் அடிக்கல் நாட்டவுள்ளார்.
மேலும், ராம்நகரில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனை மேம்படுத்தல், கழிவுநீர் தொடர்பான பணிகள், பசுக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான உள்கட்டமைப்பு வசதிகள், பலநோக்கு விதை களஞ்சிய சாலை, 100 மெட்ரிக் டன் விவசாய உற்பத்தி கிடங்கு, வீட்டு வளாகம் மற்றும் சாம்பர்ணானந்த் ஸ்டேடியத்தில் உள்ள வீரர்களுக்காக, வாரணாசி நகர ஸ்மார்ட் லைட்டிங் பணிகள் மற்றும் 105 அங்கன்வாடி கேந்திரங்கள் போன்ற பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.
மேலும், தசாஸ்வமேத் காட் மற்றும் கிட்க்கியா காட் ஆகியவற்றின் மறுவடிவமைப்பு, பிஏசி போலீஸ் படையினருக்கான தடுப்பணைகள், காசியின் சில வார்டுகளில் மறுவடிவமைப்பு, பார்க்கிங் வசதி மற்றும் பெனியா பாக் நகரில் உள்ள ஒரு பூங்காவின் மறுவடிவமைப்பு, பி.எம்.கிரிஜா தேவி சம்ஸ்கிருத சங்கூலில் பல்நோக்கு மண்டபம், நகரத்தில் சாலைகள் பழுதுபாப்பு மற்றும் சுற்றுலா இடங்களை மேம்படுத்துதல் போன்ற திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…