டெல்லியில் இன்று பிரதமர் மோடியை கொல்ல பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி.. உளவுத்துறை பரபரப்பு எச்சரிக்கை…
- பிரதமரின் பேரணியில் பாக்கிஸ்தான் தீவிரவாத தாக்குதல் சதி.
- உளவுத்துறையின் பதறவைக்கும் எச்சரிக்கை.
தலைநகர் டெல்லியில் இன்று இந்திய பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள பேரணியில் திடீர் தாக்குதல் நடத்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு சதி செய்துள்ளதாக தற்போது தகவல் தெரியவந்துள்ளது. மத்திய அரசு விரைவில் முறைப்படுத்தப்படாத குடியிருப்புகளை முறைப்படுத்துவது தொடர்பாக புதிய முடிவெடுக்கவுள்ளது. இதுதொடர்பான விளக்கப் பேரணியானது டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில் இந்தப் பேரணியில் திடீர் தாக்குதல் நடத்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்த சதி செய்திருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. எனவே, இதுதொடர்பாக டெல்லி காவல்த்துறை மற்றும் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவான எஸ்பிஜிக்கும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதைத் தொடர்ந்து பிரதமருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பில் மேலும் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியின் முக்கிய சாலைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பொதுமக்களின் நடமாட்டம், வாகனங்களின் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.மேலும்,அதிக தொலைவில் இருந்தும் துப்பாக்கியில் சரியாக குறிபார்த்து சுடும் வீரர்கள், உயரமான கட்டிடங்களில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவல் தற்போது இந்திய மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.