கங்கை கரை படியில் பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படிகளை விரைந்து இடிக்க உ.பி அரசு முடிவு..
- வற்றாத ஜீவ நதியான கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய அமைப்பை மத்திய அரசு அமைத்தது.
- இதில் கலந்து கொண்டு திரும்பும் போது பிரதமர் மோடி தவறி விழுந்த படிகளை விரைவாக இடிக்க உத்திரபிரதேச அரசு முடிவு.
அந்த அமைப்பின் முதல் கூட்டம் உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி கங்கை நதியில் படகுப் பயணம் செய்துவிட்டு திரும்பிய போது கங்கை கரையின் படியில் ஏறும்போது சீரற்ற படியால் கால் தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தாங்கி பிடித்தனர். இதில் அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படிகட்டுகளை இடித்துவிட்டு அந்த படிகளை சீரமைக்க உத்திர பிரதேச அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த மண்டல கமிஷ்னர் பாப்டே., “பிரதமர் தடுக்கி விழுந்த படி மற்ற படிகளைக் காட்டிலும் உயரம் சற்று குறைவாக வேறுபட்டு இருக்கும். இதேபோல் இதற்கு முன்னர் பலரும் அதே படியில் தடுமாறி விழுந்துள்ளனர். எனவே விரைந்து அந்த படியை மட்டும் இடித்து சரியான உயரத்தில் புதிய படிகளை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது “ என்றார்.