பிரதமர் மோடியை ‘இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்’ என்று கட்டூரை எழுதியவர் ஒரு பாகிஸ்தானியர்….மோடியின் புகழை தகர்க்க நடக்கும் சதி என பாஜக தகவல்……

Default Image

தற்போது பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் பிரதமர் மோடி தலைமையிலான் அரசை விமர்சித்தும் பிரதமர் மோடியை இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்’ என்ற சர்ச்சை தலைப்பில் பிரபல  பத்திரிக்கையில் கட்டுரை வெளிவந்து இந்திய நாட்டை மட்டுமள்ள அகில உலகையே அதிர செய்தது.இந்த இந்தியாவை துண்டாடும் வகையில் கட்டூரை எழுதியவர்  பாகிஸ்தானியர் என்றும், பிரதமர் மோடியின் புகழை கெடுக்க அவர் முயற்சித்துள்ளார் என்றும்  பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளார்.

Image result for time magazine

அமெரிக்காவில் வெளியாகும் பிரபல பத்திரிகை நிறுவனம்    இந்த வார சர்வதேச வெளியீட்டில்  பிரதமர் நரேந்திர மோடியை `பிரித்தாளும் சூழ்ச்சியின் தலைவர்’ என்ற சர்ச்சைக்குரிய தலைப்புடனும்  அட்டைப் படத்துடனும் கட்டுரை வெளியாகியுள்ளது. இதை எழுதியவர் ஆதிஷ் தசீர். அதில், ‘இந்தியாவில் கொடிய மதவாத சூழல் உருவாக மோடி உதவியுள்ளார். பிரபல  பத்திரிக்கையில் பிரதமர் மோடி பற்றி கட்டுரை எழுதியவர் ஆதிஷ் தஷீர் என்பவர் ஆவார்.இவர், இந்திய பெண் பத்திரிக்கையாளர் தவ்லீன் சிங்  மற்றும் மறைந்த பாகிஸ்தான் அரசியல்வாதியும், தொழிலதிபருமான சல்மான் தசீர் தம்பதியின் மகன் ஆவார்.

Related image

இவர் பாகிஸ்தான் கொள்கையை பின்பற்றும் ஆதிஷ் தசீர்,பிரதமர் மோடியின் புகழைக் கெடுக்க பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.இதேபோல், கடந்த நாடாளுமன்ற தேர்தலில்  மோடியை விமர்சித்து பல வெளிநாட்டு பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளியாயின.நமது பிரதமர் மோடியை விமர்சிக்கும் சித்து, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து குறித்து தற்போதுவரை வாய் திறக்கவில்லை.ஆனால் பிரதமர்  மோடியை மட்டும் சித்து விமர்சித்து வருகிறார் என்று  அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்