சூறாவளி பிரச்சாரத்தில் பிரதமர் மோடி.. பெண்களுக்கு எதிரான குற்றம்… காங்கிரஸ் மீது கடும் குற்றசாட்டு.!

PM Modi says about Congress

ராஜஸ்தான மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் (இம்மாத நவம்பர்) 25ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் முதல்வராக உள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. இந்த சட்டமன்ற தேர்தலானது 2024இல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் இரு கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கி ஆந்திரா ஐகோர்ட் உத்தரவு!

பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலதில் கடந்த சில வாரங்களாகவே சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இவர் இன்று ராஜஸ்தான் மாநிலம் பாலி நகர் மற்றும் ஹனுமன்கர் ஆகிய ஊர்களில் தீவிர சோதனை மேற்கொண்டார்.

பிரதமர் இன்று பாலி நகரில் பேசுகையில், இன்று நாம் ஒரு வளர்ந்த நாடாக மாற கடுமையாக உழைத்து வருகிறோம். இதற்கு ராஜஸ்தான் மாநில வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளிக்க ஒரு நல்ல அரசு தேவை. காங்கிரசுக்கு ஊழல் மற்றும் குடும்ப அரசியலை விட வேறு எதுவும் முக்கியமில்லை.

ராஜஸ்தானின் அண்டை மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. அங்கு பெட்ரோல் லிட்டருக்கு 97 ரூபாய் விற்கப்படுகிறது. ஆனால் ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு பெட்ரோலை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறது. ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நான் உத்தரவாதம் தருகிறேன். பெட்ரோல், டீசல் விலையானது மறுஆய்வு செய்யப்பட்டு விலை குறைக்கப்படும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நிம்மதியை அளிக்கும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.  பெண்கள் அளிக்கும் புகார்கள் போலியானவை என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறுகிறார். நம் நாட்டில் ஒரு பெண் பொய் வழக்கு போடுவது நடக்குமா? இது பெண்களை அவமதிக்கும் செயல் இல்லையா? வழக்குகள் போலியானவை என்று கூறாமல், விசாரணை நடந்து வருகிறது என்று முதல்வர் கூற வேண்டும் என்றும் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்.

பாலி பிரச்சாரத்தை முடித்துவிட்டு, அடுத்து ஹனுமன்கர், பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘ கடந்த 2014க்கு முன், அதிகாரத்தில் இருப்பவர்களுடன் தொடர்பு உள்ளவர்களுக்கு மட்டுமே பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. இன்று அந்த நிலை மாறிவிட்டது. 2014க்கு பிறகு, அர்ப்பணிப்புடன் பாடுபடுபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மக்கள் பணத்தை ஏமாற்றியவர்கள் தப்பமாட்டார்கள் என உத்திரவாதம் அளிக்கவே இன்று நான் இங்கு வந்துள்ளேன். ஏழைகளைக் கொள்ளையடித்தவர்கள் சிறையில் அடைக்கப்படும் நாள் ராஜஸ்தானில் வெகு தொலைவில் இல்லை எனவும் தனது பிரச்சார உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்