பிரதமர் மோடி ஒரு மந்திரவாதி…! பிரதமர் மராப்பின் செயலுக்கு யுபிடி தலைவர் சஞ்சய் ராவத் பதில்..!
பிரதமர் மோடி ஒரு மந்திரவாதி என்று பப்புவா நியூ கினியா பிரதமர் நினைத்திருப்பார் என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டு தனது 3 நாள் அரசுமுறை பயணத்தின் இரண்டாம் கட்டமாக பப்புவா நியூ கினியாவிற்கு நேற்று முன்தினம்(ஞாயிற்றுக்கிழமை) சென்றடைந்தார். அவரை பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப் வரவேற்றார்.
#WATCH | Prime Minister Narendra Modi arrives in Papua New Guinea for the second leg of his three-nation visit after concluding his visit to Japan. He was received by Prime Minister of Papua New Guinea James Marape. pic.twitter.com/U94yUQ2aCl
— ANI (@ANI) May 21, 2023
பிரதமர் மோடி விமானத்தில் இருந்து கீழே இறங்கியதும் பிரதமர் ஜேம்ஸ் மராப், அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று மோடியை வரவேற்றார். இது குறித்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில், சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத், மராப்பின் இந்த செயலுக்கு பதிலளித்துள்ளார்.
அவர் கூறுகையில், பாஜக நாட்டின் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது நாடு அமானுசியங்களால் நிறைந்துள்ளதால் இந்தியாவில் இருந்து யாரோ பெரிய மந்திரவாதி வந்துள்ளார், அவர் அவர்களுக்கு மந்திரம் கற்பிப்பார் என்று அவர்கள் நினைத்தார்கள், எனவே அவர்கள் அவரை அப்படி வரவேற்றனர்,” என்று கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடியை மக்கள் மதிக்க வேண்டும், அவர் வயதில் பெரியவர் என்பதால் காலில் விழுவது என்பது அனைவரும் பின்பற்றக்கூடிய ஒன்று, இந்த விஷயத்தை பாஜக தேவையில்லாமல் பரப்புகிறது என்று சிவசேனா(யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.