அதிக மகசூல்., அதிக லாபம்.! 109 ரக பயிர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி.!

PM Modi released 109 high-yielding crops

டெல்லி : விவசாயிகளுக்கு அதிக பயன், மகசூல் தரக்கூடிய 109 பயிர் ரகங்களை இந்திய வேளாண் ஆராய்ச்சியாளர்கள் (Indian Agricultural Research Institute) கண்டறிந்து இருந்தனர். அதனை நேற்று பிரதமர் மோடி விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம்விவசாயிகளின் பயிர் உற்பத்தியை அதிகரிக்க செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் பிரதமர் மோடி 109 பயிர் ரகங்களை வெளியிட்டார். இதில், 34 பயிர் வகைகள் 27 தோட்டப்பயிர்கள் ஆகியவை அடங்கும். பயிர் வகைகளில் தினை, தீவனப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி, நார் உள்ளிட்ட பயிர் வகைகள்,  தோட்டக்கலை பயிர்களில், பல்வேறு வகையான பழங்கள், காய்கறி பயிர்கள், கிழங்கு பயிர்கள், வாசனை திரவிய பயிர்கள், மலர்கள் மற்றும் மருத்துவ பயிர்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டன.

மத்திய அமைச்சரின் கூற்றுப்படி, 65 பயிர்களின் 109 வகையான விதைகள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தால் கண்டறியப்பட்டுள்ளன. 109 வகையான விதைகள் விவசாயிகளின் வேளாண் லாபத்தை அதிகரிக்கும். பொதுமக்களின் ஊட்டச்சத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். வேளாண் உள்நாட்டு ஏற்றுமதியை அதிகரிக்கும் என தெரிவித்தார்.

109 பயிர் ரகங்களை அறிமுகம் செய்து பின்னர் விழாவில் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகள் இயற்கை விவசாயத்தை அதிகளவில் பின்பற்ற வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் ஏராளமாக உள்ளன. தற்போது விவசாயிகள் பூமியின் மீதான தங்கள் பொறுப்பை உணர்ந்து பூச்சிக்கொல்லி மருந்துகளிலிருந்து விலகி வருகின்றனர்.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பயிர் ரகங்களை விவசாயிகள் தங்கள் நிலத்தின் ஒரு சிறிய பகுதியிலோ அல்லது நான்கு மூலைகளிலுமோ சோதனை முயற்சியாக பயன்படுத்துங்கள். அதில் திருப்திகரமான மகசூல் கிடைத்தால் பிறகு அதனை தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

இந்த புதிய பயிர் வகைகளை விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நமது அரசு விவசாய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று பிரதமர் மோடி நேற்றைய நிகழ்வில் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்