ஆளும் பாஜக அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த நாள் பிப்ரவரி 1ஆம் தேதியன்று 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம், வழக்கமான கேள்விநேரம், விவாதம் என இன்று (பிப்ரவரி 9) வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இந்நிலையில், அலுவல் பணிகள் காரணமாக நாளை (பிப்ரவரி 10) வரையில் நாடாளுமன்ற கடைசி கூட்டத்தொடர் நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னதாக அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தொடரில், இடைக்கால பட்ஜெட், நாட்டின் பொருளாதரம் குறித்த வெள்ளை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தொடரின் போது இன்று நாடாளுமன்றத்தில் இடைவெளி நேரத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களோடு உணவருந்தி, அவர்களுடன் ஜாலியாக கலந்துரையாடினார். அப்போது தனிப்பட்ட கேள்விகள் முதல் பொதுவான கேள்விகள் வரையில் எம்பிகளின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பிஜேடி (BJD) ராஜ்யசபா எம்.பி சஸ்மித் பத்ரா, மக்களவை உறுப்பினர் என்.கே.பிரேம சந்திரன், டிடிபி எம்பி ராம் மோகன் நாயுடு, பிஎஸ்பி (BSP) எம்பி ரித்தேஷ் பாண்டே, பாஜக எம்பி ஜம்யாங் செரிங் நம்க்யால் மற்றும் பாஜக எம்.பி எஸ் ஃபங்னோன் கொன்யாக் ஆகியோர் பிரதமருடன் கலந்துரையாடினர்.
பிரதமர் மோடி, மேற்கண்ட நாடளுமன்ற உறுப்பினர்களை “நான் உங்களை ஒரு தண்டனைக்காக வெளியே அழைத்து செல்கிறேன்” என கிண்டலாக கூறி அழைத்துள்ளார். எம்.பி.க்களும் ஆர்வமுடன் காத்திருந்தனர். பின்னர் நாடாளுமன்ற கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள கேன்டீனுக்கு பிரதமர் மோடி அவர்களை அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் அங்கு எம்பிக்களுடன் பிரதமர் மோடி ஒன்றாக உணவருந்தி உள்ளார். அப்போது அவர்கள் முதலில், உங்களுக்கு (பிரதமர் மோடி) பிடித்த உணவு எது என்று கேட்டுள்ளனர். அதற்கு உடனடியாக பிரதமர் மோடி, கிச்சடி (நம்ம ஊர் உப்புமா போன்ற உணவு) என பதில் கூறியுள்ளார்.
அடுத்து பிரதமராக இருந்து கொண்டு பயணம் மற்றும் வேலைப்பளு பற்றி கேட்டதற்கு, பிரதமர் மோடி, நீண்ட நேரம் வேலை செய்வது எனது வழக்கம். சில நேரங்களில், நான் ஒரு நாள் முழுவதும் தூங்காமல் வேலை செய்துள்ளேன். குஜராத் முதலமைச்சராக பொறுப்பில் இருந்த எனது அனுபவம் தற்போது பயனுள்ளதாக இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
கடந்த 2015ஆம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகள் திருமணத்திற்கு திடீரென சென்றது பற்றி கேட்கப்பட்ட போது, அந்த அனுபவம் பற்றி பிரதமர் மோடி விரிவாக கூறினார். அதில், அன்றைய தினம் பிற்பகல் 2 மணி வரை நான் நாடாளுமன்றத்தில் இருந்தேன். பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்ட பயணத்திற்கு புறப்பட்டேன். பின்னர் ஆப்கன் பயணத்தை முடித்து திரும்பும் போது, பாகிஸ்தான் வழியாக செல்ல கூறினேன்.
ஆனால், பாதுகாப்பு அதிகாரிகள் முதலில் மறுத்துவிட்டதாகவும் அடுத்து நவாஸ் ஷெரீப்பை அழைத்து, பாகிஸ்தான் பாதுகாப்பு பற்றி தெரிந்து கொண்டு. நமது பாதுகாப்பு, பாகிஸ்தான் பாதுகாப்பு என தரப்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தெரிந்து கொண்டு பின்னர் பாகிஸ்தானுக்கு சென்றதாக பிரதமர் மோடி கூறினார்.
கோவிட்-19 நெருக்கடியைக் எவ்வாறு கையாண்டீர்கள் என கேட்டதற்கு, குஜராத் முதல்வராக இருந்த சமயத்தில் 2001ஆம் ஆண்டு குஜராத்தின் பூஜ்ஜில் ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்திற்குப் பிறகு அதன் நிலைமையை நிர்வகித்த அனுபவம் கோவிட 19ஐ சமாளிக்க உதவியது என்றார். மேலும் அந்த அனுபவம் ஏப்ரல் 2015இல் இமயமலை நாட்டை தாக்கிய நிலநடுக்கத்திற்குப் பிறகு நேபாள அரசாங்கத்திற்கு தான் ஆலோசனை வழங்கியதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடியின் ஓய்வு ரகசியம் பற்றி கேட்கையில், “நான் தினமும் தவறாமல் யோகா செய்கிறேன், பல்வேறு வகையான உடற்பயிற்சி மற்றும் தியானத்தின் மூலம் என் மனதையும் உடலையும் ரிலாக்ஸ்டாக வைத்திருக்கிறேன்” என்றும், நான் தற்போது உங்களுடன் உணவு சாப்பிடுகிறேன், நான் தற்போது நிம்மதியாக இருக்கிறேன். நான் 24 மணிநேரமும் பிரதமராக உங்களுக்கு தெரிந்தாலும் உங்கள் ஒவ்வொருவரையும் போலவே நானும் ஒரு சாதாரண மனிதனாகவே என்றும் இருக்கிறேன் என வெளிப்படையாக எம்பிகளுடன் உரையாடினார் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…