மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்க மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.ஹூக்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தென்கிழக்கு ரயில் வேயின் 132 கி.மீ நீளமுள்ள கரக்பூர்-ஆதித்யாபூர் மூன்றாம் வரிசை திட்டத்தின் 30 கி.மீ நீளத்திற்கு கலைகுண்டா மற்றும் ஜார்கிராம் இடையேயான மூன்றாவது பாதையை திறந்து வைத்துள்ளார். இது 1,312 கோடி செலவில் அமைக்கப்பட்டது.
அசிம்கனி முதல் கர்கிராகாட் சாலை பிரிவு வரையிலான தடம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ள திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது கிழக்கு ரயில்வேயின் ஹவுரா பண்டல்- அசிம்கனி பகுதி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்திற்கு சுமார் 240 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.நோவாபரா முதல் தக்ஷினேஷ்வர் வரையிலான மெட்ரோ ரயில்வே விரிவாக்கத் திட்டத்தை, பிரதமர்தொடங்கி வைத்தார். இந்த வழித்தடத்தில் அவர் முதலாவது சேவையைக் கொடியசைத்து, தொடங்கி வைத்தார். 4.1 கிலோமீட்டர் தொலைவிலான இந்த விரிவாக்க வழித்தடம் 464 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.