பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று பிரதமர், பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதன் போது, விவசாயிகள் முன்னிலையில், 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிலான 36 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, துவக்கி வைக்கிறார். அவருடன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொள்கிறார்.
இன்று திறந்து வைக்கப்படும் திட்டங்களில் அமுலின் பனாஸ் பால் பண்ணை முக்கியமானது. பனாஸ் பால் ஆலை திறப்பு விழாவுக்குப் பிறகு, பிரதமர் கார்க்கியான்வில் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். இந்தப் பொதுக்கூட்டத்தில் பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர். விவசாயிகள் முன்னிலையில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான 36 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், துவக்கி வைக்கிறார்.
வாரணாசியின் அமுல் பனாஸ் பால் ஆலை 622 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலையில் தினமும் 8 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் திறன் கொண்டது. இந்த ஆலையில் சுமார் 3100 பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இந்நிலையில், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்வதந்திர சபாகரில் சன்சத் சமஸ்கிருத பிரதியோகிதா வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொண்டார்.
உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சன்சாத் சமஸ்கிருத போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்கினார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “காலத்தை விட பழமையானது என்று அழைக்கப்படும் காசி, அதன் அடையாளத்தை இளம் தலைமுறையினர் பொறுப்புடன் மேம்படுத்தி வருகின்றனர். இந்த காட்சி என் மனதை திருப்திப்படுத்துகிறது. என்னை பெருமைப்படுத்துகிறது மற்றும் இளைஞர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது.
அமிர்த காலால் நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். கடந்த 10 ஆண்டுகளில் காசியில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகள், கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட வளர்ச்சிப் பயணம் அனைத்தும் காபி டேபிள் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன என தெரிவித்தார். காசி வேகமாக மாறியுள்ளது. இதை நீங்கள் அனைவரும் பார்த்திருக்கிறீர்கள், இதுவே காசியின் திறன் இதுதான் காசி மக்களின் மரியாதை இது மகாதேவனின் ஆசீர்வாதத்தின் சக்தி என கூறினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டுள்ளார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…