வாரணாசியில் 13,000 கோடியில் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

PMModi

பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று  பிரதமர், பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதன் போது, ​​விவசாயிகள் முன்னிலையில், 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிலான 36 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, துவக்கி வைக்கிறார். அவருடன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொள்கிறார்.

இன்று திறந்து வைக்கப்படும் திட்டங்களில் அமுலின் பனாஸ் பால் பண்ணை முக்கியமானது. பனாஸ் பால் ஆலை திறப்பு விழாவுக்குப் பிறகு, பிரதமர் கார்க்கியான்வில் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். இந்தப் பொதுக்கூட்டத்தில் பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர். விவசாயிகள் முன்னிலையில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான 36 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், துவக்கி வைக்கிறார்.

வாரணாசியின் அமுல் பனாஸ் பால் ஆலை 622 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலையில் தினமும் 8 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் திறன் கொண்டது. இந்த ஆலையில் சுமார் 3100 பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இந்நிலையில், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்வதந்திர சபாகரில் சன்சத் சமஸ்கிருத பிரதியோகிதா வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொண்டார்.

உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சன்சாத் சமஸ்கிருத போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர்  மோடி விருதுகளை வழங்கினார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “காலத்தை விட பழமையானது என்று அழைக்கப்படும் காசி, அதன் அடையாளத்தை இளம் தலைமுறையினர் பொறுப்புடன் மேம்படுத்தி வருகின்றனர். இந்த காட்சி என் மனதை திருப்திப்படுத்துகிறது. என்னை பெருமைப்படுத்துகிறது மற்றும் இளைஞர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது.

அமிர்த காலால் நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். கடந்த 10 ஆண்டுகளில் காசியில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகள், கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட வளர்ச்சிப் பயணம் அனைத்தும் காபி டேபிள் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன என தெரிவித்தார். காசி வேகமாக மாறியுள்ளது. இதை நீங்கள் அனைவரும் பார்த்திருக்கிறீர்கள், இதுவே காசியின் திறன் இதுதான் காசி மக்களின் மரியாதை இது மகாதேவனின் ஆசீர்வாதத்தின் சக்தி என கூறினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்