554 ரயில் நிலையங்கள்… 1,500 ரயில்வே மேம்பாலங்கள் திட்டப்பணிகள்.! பிரதமர் மோடி துவக்கம்.!
அம்ருத் ரயில் நிலைய திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 2000 ரயில் நிலையங்களை மத்திய அரசு புதுப்பித்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு முதற்கட்டமாக 508 ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் பணிகளை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
Read More – விவசாயி மீது தாக்குதல்.. காவல்துறைக்கு எதிராக கண்டனம் தெரிவித்த பாஜக மூத்த தலைவர்
தற்போது அதே போல இந்தாண்டு 2ஆம் கட்டமாக 554 ரயில் நிலையங்களை புனரமைக்க இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த பணிக்காக மட்டும் சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 1500 ரயில்வே மேம்பாலங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. என மொத்தமாக இன்று 21,520 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
Read More – அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான ஊழல் வழக்கு.! பிடிவாரண்ட் பிறப்பிக்கவும் உத்தரவு.!
இன்று 2ஆம் கட்டமாக அம்ருத் ரயில் நிலைய திட்டத்தின் மூலம் மறுசீரமைக்கப்படும் ரயில் நிலையங்களில், தமிழகத்தில் இருந்து 34 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளன. சென்னை மண்டலத்தில் 7 ரயில் நிலையங்கள், சேலம் மண்டலத்தில் 8 ரயில் நிலையங்கள், திருச்சியில் 4 ரயில் நிலையங்கள், மதுரை மண்டலத்தில் 13 ரயில் நிலையங்கள், தருமபுரி, ஓசூர் ரயில் நிலையங்கள் என மொத்தம் 34 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளது.
Read More – மகளிர் உரிமை தொகைத் தொகை பறிபோகும்… கனிமொழி எம்.பி பரபரப்பு பேச்சு.!
மேலும் , உத்திர பிரதேசத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கோமதி ரயில் நிலையத்தை பிரதமர் மோடி இன்று மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி துவங்கி வைத்துவ வருகிறார். நாளை பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார்.