காங்கிரஸ் தோல்வி… இனி அதிர்ஷ்டம் தான் கைகொடுக்கணும்.! பிரதமர் மோடி பேச்சு.!
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. சிவராஜ் சிங் சௌகான் முதல்வர் பொறுப்பில் இருக்கிறார்.
கடந்த முறை நடந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றி பின்னர் பாஜகவிடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. அதே போல, கைப்பற்றிய ஆட்சியை அப்படியே தொடர பாஜகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
காங். தலைவர் வீட்டிற்கே சென்று வாக்கு சேகரித்த ம.பி முதல்வரும், பாஜக தலைவருமான சிவராஜ் சிங்.!
மத்திய பிரதேசத்தில், பெதுல் நகரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸின் ஊழல் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் கஜானாய் கொள்ளையடிப்பதையும் மக்கள் கண்டுகொண்டு விட்டார்கள். இனி கஜானாவை காங்கிரஸ் தொடாமல் தடுப்பதற்காகத்தான் இந்தத் தேர்தலில் நீங்கள் (மக்கள்) செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
காங்கிரஸின் கைகளுக்குத் திருடவும், கொள்ளையடிக்கவும் மட்டுமே தெரியும். காங்கிரஸ் எங்கு வந்தாலும், அவர்கள் அழிவையும் சேர்த்தே கொண்டு வருகிறார்கள் எனவும் பிரதமர் குற்றம் சாட்டினார்.
நவம்பர் 17ஆம் தேதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸின் உண்மை முகம் அம்பலமாகி வருகின்றன. இன்று, ஒட்டுமொத்த மத்தியப் பிரதேசத்திலிருந்தும் எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. காங்கிரஸ் தங்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டார்கள். இப்போது அவர்கள் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியுள்ளனர் எனவும் இன்று தனது பிரச்சார உரையில் பிரதமர் மோடி பேசினார்.