சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேநதிர மோடி பேசுகையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்கு ஆபத்து என்றும் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் விடுவார்கள் என்றும் பரபரப்பாக பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், சமாஜ்வாடியும் காங்கிரஸும் ஆட்சிக்கு வந்தால் பகவான் ராமர் மீண்டும் கூடாரத்தில் அமர்ந்துவிடுவார். ராமர் கோவிலுக்குள் புல்டோசர் ஓட்டுவார்கள். புல்டோசரை எங்கு இயக்க வேண்டும், எங்கு ஓடக்கூடாது என்பதை உ.பி முதல்வர் யோகியிடம் அவர்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
அயோத்தி ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாற்ற விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசியுள்ளார். இது சாத்தியமாகுமா என்று சிலர் நினைக்கலாம். ஆனால் இதனை செய்ய அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதுதான் அவர்களின் சாதனை பதிவு. அவர்களுக்கு நாடு ஒரு பொருட்டே இல்லை. குடும்பம், பதவி இதுதான் அவர்களுக்கு முக்கியம்.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…