இந்த பெரிய பூனைகளை பாதுகாக்க வேண்டும்.! குஜராத்துக்கு அழைக்கும் பிரதமர் மோடி…
குஜராத் : இன்று (ஆகஸ்ட் 10) உலகம் முழுக்க சிங்க தினம் (World Lion Day) கொண்டாடப்பட்டு வருகிறது. பூனை வகைகளில் மிக பெரிய மிருகமாக சிங்கங்கள் பார்க்கப்படுகிறது. சிங்கங்களில் குணங்களை அடிப்படையாக கொண்டு அதனை காடுகளின் அரசன் என அழைக்கப்படுகிறது.
இந்த சிங்க தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் சிங்கங்களில் அழகான புகைப்படங்களை பதிவிட்டு சிங்க தினம் பற்றிய பல்வேறு தகவல்களை பதிவிட்டுள்ளார்.
அதில், உலக சிங்க தினத்தன்று, சிங்கங்களின் பாதுகாப்பில் பாடுபடும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன், இந்த கம்பீரமான பெரிய பூனைகளைப் பாதுகாக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்தியாவில் குஜராத்தின் கிர் வனப்பகுதியில் தான் அதிக சிங்கங்கள் இருக்கின்றன. பல ஆண்டுகளாக, சிங்கங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது, இது நமக்கு நல்ல செய்தி.
இந்த ஆண்டு பிப்ரவரியில், பெரிய பூனைகள் வசிக்கும் உலகின் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைத்து சிங்கங்களை பாதுகாக்கும் வகையில் சர்வதேச கூட்டமைப்பை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முயற்சிக்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
கம்பீரமான ஆசிய சிங்கத்தைக் கண்டறிய அனைத்து வனவிலங்கு பிரியர்களையும் குஜராத் கிர் வனத்திற்கு அழைக்கிறேன். சிங்கத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளைக் காணவும், அதே நேரத்தில் குஜராத் மக்களின் விருந்தோம்பலை அனுபவிக்கவும் இது அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் என பிரதமர் மோடி சிங்க தினத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
On World Lion Day 🦁, I compliment all those working on Lion conservation and reiterate our commitment to protecting these majestic big cats. India, as we all know, is home to a large Lion population in Gir, Gujarat. Over the years, their numbers have increased significantly,… pic.twitter.com/PbnlhBlj71
— Narendra Modi (@narendramodi) August 10, 2024