காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் (Rajya saba MP) தீரஜ் சாஹு (Dhiraj sahu ) வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையானது ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் தொடர்ந்தது.
இது ஒரு ஜனநாயகப் படுகொலை – மம்தா பானர்ஜி
இந்த 3 நாள் அமலாக்கத்துறை சோதனையில் தீரஜ் சாஹு தொடர்புடைய இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எவ்வளவு பணம் என்பது இன்னும் உறுதியாக கூறப்படவில்லை. மொத்தப் பணத்தின் அளவு சுமார் 200 கோடிக்கும் மேல் இருக்கும் என்றும், இந்த தொகை பலங்கிர் மாவட்டத்தில் உள்ள பௌத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட் வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒடிசாவின் சம்பல்பூர் மற்றும் சுந்தர்கர், பொகாரோ மற்றும் ஜார்கண்டின் ராஞ்சி என பல்வேறு இடங்களில் கடந்த புதன் கிழமை முதல் இந்த சோதனை நடைபெற்று வந்துள்ளது. கட்டுக்கட்டாக பணம் சிக்கியதால் அதனை எண்ணுவதற்கு பணம் என்னும் மிஷின் கொண்டு வரப்பட்டது . ஆனால் மிஷின் மூலம் ஓரளவுக்கு மட்டுமே எண்ண முடியும் என்பதால் இன்னும் பணம் எண்ணும் பணி தொடர்வதாக கூறப்படுகிறது.
இந்த ரெய்டு, பணம் பறிமுதல் பற்றி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், நாட்டு மக்கள் இந்தக் கட்டு கட்டான ரூபாய் நோட்டுகளை பார்த்துவிட்டு தங்கள் தலைவர்களின் (காங்கிரஸ்) நேர்மையான பேச்சுகளை கேட்க வேண்டும் என விமர்சித்தார்.
மேலும், பொதுமக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவும் மக்களுக்கு திருப்பித் கொடுக்கப்படும். இது மோடியின் உத்தரவாதம் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…