சந்திரபாபு நாயுடு பதவியேற்பு.! பிரதமர் மோடிக்கு அழைப்பு.!

ஆந்திர மாநிலம்: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 135 தொகுதிகளை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வென்றுள்ளது. பாஜக 8 இடங்களையும், ஜனசேனா 21 இடங்களையும், ஆளும் YSR காங்கிரஸ் 11 இடங்களை யும் வென்று இருந்தது.
இந்நிலையில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தெலுங்கு தேசம் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரேம் குமார் ஜெயின் ANI பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “சந்திரபாபு நாயுடு நேற்றே அவரது முழு ஆதரவையும் என்.டி.ஏ-வுக்கு தெரிவித்திருந்தார். இந்திய கூட்டணி எதை வேண்டுமென்றாலும் கூறலாம். ஆனால், நாங்கள் என்.டி.ஏ-வுடன் தான் இருக்கிறோம்.
மேலும், வருகிற ஜூன் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் சந்திரபாபு பதிவியேற்பு விழாவிற்கு பிரதமர் அழைக்கப்பட்டுள்ளார் மேலும் மற்ற தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளோம்”, என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025