பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!
காஷ்மீர் பகல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் கேட்டறிந்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து ஆய்வு நடத்த அமித்ஷா தற்போது ஸ்ரீநகர் செல்ல உள்ளார்.

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு சுற்றுலாப்பயணி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அனந்த்நாக் மாவட்டத்தில் பகல்காம் எனுமிடத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சுமார் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து அறிந்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை போனில் தொடர்பு கொண்டு காஷ்மீர் நிலைமை குறித்து கேட்டறிந்ததாகவும், தாக்குதல் நடந்த இடத்திற்கு உடனடியாக சென்று ஆய்வு செய்யவும் பிரதமர் கூறியதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி தற்போது அரசு முறை பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு இன்று இரவு 7 மணி அளவில் செல்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இச்சம்பவம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்ட மத்திய அமைச்சர் அமித்சா, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பகல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவம் வேதனை அளிக்கிறது. இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுடன் நாங்கள் துணையாக இருப்போம். இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்களை தப்பிக்க விடமாட்டோம், மேலும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
பிரதமர் மோடி, இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அனைத்து பாதுகாப்பு அமைப்புகளுடன் அவசர பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்தை நடத்த நான் ஸ்ரீநகருக்கு செல்கிறேன்.” என அமித்ஷா பதிவிட்டுள்ளார் .
Anguished by the terror attack on tourists in Pahalgam, Jammu and Kashmir. My thoughts are with the family members of the deceased. Those involved in this dastardly act of terror will not be spared, and we will come down heavily on the perpetrators with the harshest consequences.…
— Amit Shah (@AmitShah) April 22, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025