PM in Chhattisgarh [Image Source : ANI]
சத்திஷ்கரில் இருக்கக்கூடிய 90 சட்டமன்ற தொகுதிகளில், 20 சட்டமன்ற தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதே போல மிசோரத்திலும் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கரில் உள்ள 10 தொகுதிகளில், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, மாலை 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. மீதமுள்ள 10 தொகுதிகளில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. முதல் கட்டமாக 600 வாக்குச்சாவடிகளில் சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் பிஷ்ராம்பூரில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம், நாட்டில் பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளின் தைரியம் அதிகரிக்கிறது. நக்சல் வன்முறையை கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசு தவறிவிட்டது.”என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சமீப காலமாக, பல பாஜகவினர் எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு, எங்கள் தொழிலாளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். எங்கள் சகோதரிகள் மற்றும் மகள்கள் குற்றவாளிகளால் குறிவைக்கப்படுகிறார்கள். பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த பல சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். இதற்கு காங்கிரஸ் தலைவர்களிடம் பதில் இல்லை.” என்றார்.
மேலும், “காங்கிரஸின் சமாதானக் கொள்கையால், சத்தீஸ்கரின் சர்குஜா பகுதியில் பண்டிகைகளைக் கொண்டாடுவது கடினமாகிவிட்டது. காங்கிரஸ் உங்கள் அனைவருக்கும் துரோகத்தை தவிர வேறு எதையும் கொடுக்கவில்லை. சத்தீஸ்கர் இளைஞர்களின் கனவை கூட காங்கிரஸ் நிறைவேற்றவில்லை. மகாதேவ் என்ற பெயரில் ஒரு மோசடி கூட செய்தார்கள்.”
“மகாதேவ் சூதாட்ட மோசடி இன்று நாடு மற்றும் வெளிநாடுகளில் பேசப்பட்டு வருகிறது. காங்கிரஸ் உங்கள் பிள்ளைகளை பந்தயம் கட்ட வைத்து தனது கஜானாவை நிரப்பியுள்ளது.” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதற்கிடையில், சத்திஷ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…