பிரதமர் மோடி சென்ற விமானம் எந்திர கோளாறு காரணமாக பாதியில் தரையிறக்கம்!
பிரதமர் மோடி 7 நாள் அரசியல் முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு, அமெரிக்கவில் இருக்கும் இந்தியர்கள் மத்தியில் ஹவ்டி மோடி எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேச உள்ளார். இந்நிகழ்ச்சி, அமெரிக்கா டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொள்ள உள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க செல்வதற்காக மோடி சென்ற விமானம் இடையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜெர்மனி நாட்டில் தரையிறக்கப்பட்டது. அங்கு ப்ராங்பர்ட் விமானநிலையத்தில் தரையிறங்கியது. அங்கு இந்திய தூதர் முக்தா தோமர் மற்றும் ஜெர்மன் அதிகாரி பிரதீபா பார்கர் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து, விமானம் சரி செய்யப்பட்டு அமெரிக்கா சென்றது. அமெரிக்காவில் அதிகாரிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.