PM Modi : தூத்துக்குடி முத்து, நீலகிரி தேயிலை உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொருட்களை பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோர் இன்று டெல்லியில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதில் செயற்கை நுண்ணறிவு, உலக காலநிலை மாற்றம், பெண்களுக்கான முன்னுரிமைகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்து ஆலோசித்தனர்.
அதில், பேசிய பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கவனமாக செயல்பட வேண்டும் என்றும், கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும், கிராமப்புறங்களிலும் தொழில்நுட்ப வளர்ச்சியை பிரதிநிதித்தவப்படுத்த வேண்டும் என்றும், பெண்களின் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
இந்த உரையாடல் நிகழ்ந்த பிறகு, இறுதியில் நரேந்திர மோடிக்கு பில் கேட்ஸ், ஊட்டச்சத்து குறித்த ஒரு புத்தகத்தினை பரிசாக வழங்கினார். அதற்கு பதிலாக இந்தியாவின் பல்வேறு பாரம்பரிய பொருட்களை பிரதமர் மோடி பில் கேட்ஸ்க்கு பரிசாக வழங்கினார்.
பிரதமர் மோடி கொடுத்த பரிசுகளின், நீலகிரி, டார்ஜிலிங் தேயிலை, காஷ்மீர் குங்குமப்பூ, தூத்துக்குடி முத்து கற்கள், தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட குதிரை பொம்மைகள் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி, பில்கேட்ஸுக்கு பரிசாக அளித்தார்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…