மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி பார்க்கவில்லை.! ராகுல்காந்தி பேச்சு.!

PM Modi - Rahul gandhi

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இன்று இரண்டாம் கட்டமாக ஒற்றுமை யாத்திரையை,” இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை” எனும் பெயரில் மணிப்பூர் மாநிலம் தவுபல் மாவட்டத்தில் இருந்து துவங்கியுள்ளார். கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி துவங்கிய இந்த யாத்திரை தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி.! 67 நாட்கள்.! 6,713 கிமீ பயணம்.!

இந்த விழாவில் ராகுல்காந்தி பேசுகையில்,  நான் 2004 முதல் அரசியலில் உள்ளேன், முதல்முறையாக இந்தியாவில் ஒட்டுமொத்த நிர்வாக கட்டமைப்பும் சரிந்த இடத்திற்கு (மணிப்பூர்) வந்துள்ளேன். கடந்த வருடம் ஜூன் 29க்கு பிறகு மணிப்பூர் மாநிலம் மணிப்பூர் போலவே இல்லை. எங்கும் பிளவுபட்டு எங்கும் வெறுப்பு பரவியது.

லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்ட்டனர். இங்குள்ள மக்கள் தங்கள் கண்ணெதிரே தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தனர். இதுவரை உங்கள் கண்ணீரைத் துடைத்து கையை பிடிக்க இந்திய பிரதமர் மோடி இங்கு வரவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம்.  பிரதமர் மோடி, ஆளும்  பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பது தெரியவில்லை என்று நினைக்கிறன்.

தற்போது நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை நிலை அதிகமாக நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளளது என ஆளும் பாஜக அரசு பற்றியும், பிரதமர் மோடி பற்றியும் பல்வேறு விமர்சனங்களை ராகுல்காந்தி முன்வைத்து பேசினார். இந்த துவக்க விழா முடிந்த பிறகு மாலையில் ராகுல்காந்தி தனது ஒற்றுமை யாத்திரை நியாய நடைப்பயணத்தை துவங்க உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்