ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?! பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் தீவிர ஆலோசனை.!
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமல் தடுக்கும் வண்ணம் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சில மாநில முதல்வர்கள், மருத்துவர்கள் என பலர் நோய் பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தற்போது இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை முடிந்தவுடன் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.