உக்ரைனுக்கு நேரடியாக மருத்துவ உதவிகளை வழங்கினார் பிரதமர் மோடி!

PM Modi directly provided medical aid to Ukraine

உக்ரைன் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து இந்தியா சார்பாக மருத்துவ உதவிகளை வழங்கினார் பிரதமர் மோடி.

போலாந்தில் இருந்து ரயில் மூலம் உக்ரைனுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்துள்ளனர். இதன் மூலம் 45 ஆண்டுகளுக்குப் பிறகு, உக்ரைன் சென்றுள்ள இந்திய பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் மோடி.

அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ள நிலையில், கீவ் நகரம் மீது ரஷ்யா இதுவரை எந்த தாக்குதலும் நடத்தவில்லை. கடந்த 24 மணி நேரமாக மோடியின் வருகையை ஒட்டி தனது தாக்குதலையே நிறுத்தி வைத்துள்ளது ரஷ்யா. கீவ் நகரத்தில் இதுவரை எங்கும் Siren ஒலிக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது, உக்ரைனின் கீவ் நகரம் சென்றடைந்த பிரதமர் மோடி, மகாத்மா காந்தியின் அமைதி மற்றும் அகிம்சை செய்தியை வலியுறுத்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து, ரஷ்ய ஆக்கிரமிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக இன்று கீவ் நகரில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

குறிப்பாக இந்த பயணத்தின் போது, ​​மருத்துவ உதவிக்கான பீஷ்ம் கனசதுரத்தை இந்தியா உக்ரைனிடம் ஒப்படைத்துள்ளது. ஆம், ரஷ்யா உடனான போரில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு, ‘Project BHISHM’ திட்டத்தின்கீழ் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், கூடாரங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த உதவியை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் கிய்வில் வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Priyanka Gandhi
AUS vs IND , KL Rahul - Jaiswal
amaran ott
Congress - TMC - BJP
Annamalai (14) (1)
dindigul srinivasan