டெல்லி: பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது M வரிசையில் மணிப்பூர் என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தவில்லை என மக்களவையில் TMC எம்பி மஹுவா மொய்த்ரா விமர்சித்துள்ளார்.
இன்று மக்களவை கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். அப்போது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா ஆளும் பாஜக அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், கடந்த முறை என்ன யாரும் பேச அனுமதிக்கவில்லை. என்னை அடக்க நினைத்தார்கள். அதனால் தான் அவர்கள் 63 எம்.பிக்களை இழந்தனர். பாஜகவினரை மக்கள் முடக்கிவிட்டனர். கடந்த முறை 303 என்று இருந்த பாஜக எம்பிக்கள் தற்போது 240ஆக குறைந்துவிட்டனர்.
கடந்த வருடத்தில் என்னை பார்த்து பலர் நீங்கள் நிறைய இழந்துவிட்டீர்கள் என்று கூறினார்கள். ஆமாம் நான் எனது பதவியை இழந்தேன். என் வீட்டை இழந்தேன். அறுவை சிகிச்சையின் போது எனது கர்ப்பப்பையை இழந்தேன். ஆனால் ராகுல் காந்தி கூறியது போல நான் என்னுடைய பயத்தை இழந்து விடுதலையை பெற்றுவிட்டேன். வரலாற்றில் இல்லாத அளவுக்கு குடியரசு தலைவர் செங்கோலுடன் அழைத்து வரப்பட்டார். இது என்ன மன்னராட்சியா.? ஜனநாயக நாட்டில் செங்கோல் எதற்கு .? என கடுமையாக உரையாற்றினார் மஹுவா மொய்த்ரா.
மேலும் பேசிய மொய்த்ரா பிரதமரையும் விமர்சனம் செய்து இருந்தார். பிரதமர் பற்றி அவர் குறிப்பிடுகையில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது Musalman , Mulla, Madrasa, Mutton ஆகிய எல்லா M வரிசை சொற்களையும் பயன்படுத்தினார் ஆனால் அவர் பயன்படுத்தாத M வரிசை சொல் மணிப்பூர் (Manipur) மட்டுமே என்று விமர்சனம் செய்தார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா.
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…