கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசி: பிரதமர் மோடி முக்கிய தகவல்

Narendra Modi: கர்ப்பவாய் புற்றுநோய்க்கு இந்தியப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்க வழிவகை செய்வதே தனது இலக்கு என பிரதமர் மோடி தகவல்.

மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், உலகக் கோடீஸ்வரருமான பில்கேட்ஸ் உடனான உரையாடலின் போது தன்னை தொடர்ந்து நடத்துவது என்ன, ஓய்வு பழக்கம் உள்ளிட்டவை குறித்து சுவாரசியமான தகவல்களை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

அதன்படி தனக்கு ஓய்வு என்பது autopilot முறையில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். உதாரணமாக, இரவு வெகுநேரம் வரை வேலை செய்த பின்னும் தன்னால் அதிகாலையில் எழுந்திருக்க முடியும், இதற்காக தான் கூடுதல் முயற்சி செய்ய வேண்டியதில்லை, அது தனக்கு இயல்பாகிவிட்டதாக பதிலளித்தார்.

கொரோனா தொற்று நோயை எதிர்கொண்டது, தடுப்பூசி கண்டுப்பிடித்து மக்களிடம் எடுத்து சென்றது குறித்து பில்கேட்ஸ் கேள்விகளை முன்வைத்தார். அதற்கு, அந்த பேரிடர் அரசுக்கும், வைரஸை இடையேயானது என்று எண்ணாமல், ஆரம்பம் முதலே வாழ்கை மற்றும் வைரசுக்கு இடையேயான சண்டையாகயாக பார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

தொடர்ந்து மோடி, பில்கேட்ஸ் உடன் பேசும் போது, இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களுக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார். மேலும் தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்தவுடன், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஆய்வு செய்யும் நோக்கத்தில் உள்ள நாட்டின் விஞ்ஞானிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து திட்டம் உள்ளதாகவும் இந்தியாவில் பெண்களை கர்ப்பவாய் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதே எனது குறிக்கோள் எனவும் மோடி தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்