இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், நாட்டின் சிறந்த மருத்துவர்களுடன் இன்று மாலை 4:30 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுபடுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், நாள் ஒன்றுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று காலை அமைச்சர்களுடன் கொரோனா பரவல் தொடர்பாகவும், கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினார், அதனைதொடர்ந்து, நாட்டின் சிறந்த மருத்துவர்களுடன் இன்று மாலை 4:30 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். அதுமட்டுமின்றி, சிறந்த மருந்து நிறுவனங்களுடனும் மாலை 6 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
பாரம்பரிய அரிசிகளில் ஒன்றான தூய மல்லி அரிசியின் மகத்துவம், அதன் ஆரோக்கிய நன்மைக பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
சென்னை : அண்ணாபல்கலைகழக வளாகத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…