பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை
பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக முதலில் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.அதன் பின்னர் கொரோனா தீவிரம் அடைந்து வந்த நிலையில் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.இதனிடையே இன்று பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது.இந்த ஆலோசனையில் ஊரடங்கை நீட்டிக்கப்படுவதா? இல்லை வேண்டாமா ? என்று ஆலோசிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் . பிரதமருடனான ஆலோசனையில் தமிழக முதல்வர் பழனிசாமி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.