ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய குதிரையேற்ற அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!

Indian-Equestrian-Team

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டியில், இன்று நடைபெற்ற குதிரையேற்றப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய குதிரையேற்ற அணியினர் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர். அதன்படி, அனுஷ் அகர்வாலா, ஹிருதய் விபுல், திவ்யாகிருதி மற்றும் சுதிப்தி ஹஜேலா அடங்கிய இந்திய குதிரையேற்ற அணி முதல் இடம் பிடித்துள்ளது.

இவர்கள் 209.205 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குதிரையேற்றத்தில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. இந்நிலையில் தங்கம் வென்று சரித்திரம் படைத்த இந்திய குதிரையேற்ற அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் உள்ள பதிவில், “பல தசாப்தங்களுக்குப் பிறகு, எங்கள் குதிரையேற்ற அணியினர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றது மிகவும் பெருமைக்குரிய விஷயம்! ஹிருதய் சேடா, அனுஷ் அகர்வாலா, சுதிப்தி ஹஜேலா மற்றும் திவ்யக்ரித் சிங் ஆகியோர் இணையற்ற திறமையையும், குழுப்பணியையும் வெளிப்படுத்தி, சர்வதேச அரங்கில் நமது தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.”

“இந்த வரலாற்றுச் சாதனைக்காக அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் வென்றதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா மொத்தமாக 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. மேலும், ஆசிய விளையாட்டு போட்டிகளில் 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 6 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 12 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்