மத்தியப் பிரதேச ஆரம்பப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்ட 5,500 ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!
பிரதமர் மோடி மத்தியப் பிரதேச ரோஸ்கர் மேளா நிகழ்வில் உரையாற்றி வருகிறார். அதில், ஆரம்பப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்ட 5,500 ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “மத்தியப் பிரதேசத்தின் ஆரம்பப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்ட 5,500 ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள். கடந்த மூன்று ஆண்டுகளில், ம.பி.யில் சுமார் 50,000 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.”
மேலும், “ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு தாய்மொழியில் கற்பிக்காமல் அநீதி இழைக்கப்பட்டது. இப்போது, எங்கள் அரசு பிராந்திய மொழி புத்தகங்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது” என்று கூறினார்.