விழிப்புணர்வுக்காக புரொபைல் புகைப்படத்தை மாற்றிய பிரதமர் மோடி.!
நாளுக்கு நாள் கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் அறிவிக்கபட்ட 21 நாள் ஊரடங்கு மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டு,மே மாதம் 3ஆம் தேதி வரையில் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் அறிவித்திருந்தார்.
பிரதமர் இன்று மக்களிடையே இணையம் வழியாக பேசுகையில் ஒரு துண்டால் தனது முகத்தை மூடியவாறு பேச தொடங்கி பின்னர் அதனை நீக்கி முழு முகம் தெரியுமாறு தனது பேச்சை தொடர்ந்தார்.
பின்னர் தனது டிவிட்டர் பக்கத்தின் புரொபைல் புகைப்படத்தை பிரதமர் மோடி மாற்றியுள்ளார். அதில் துண்டால் முகத்தை பாதி மறைத்தார் போல பிரதமர் மோடி இருக்கிறார்.