குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல் – தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் மோடி
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்தார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தனது வாக்கை பிரதமர் மோடி பதிவு செய்தார். பிரதமரை தொடர்ந்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தனர். புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.
இதனிடையே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடும் நிலையில், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைந்த மறுநாள், புதிதாக தேர்தெடுக்கப்டும் அடுத்த துணை ஜனாதிபதி ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்பார்.