சுற்றுப் பயணத்தை ரத்து செய்த பிரதமர் மோடி.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பிரசல்ஸ் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் உள்ள பிரசல்ஸ் நகரில், வரும் 13ம் தேதி இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு கொரோனா வைரஸ் பரவி வருவதால், மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.