PM Modi - Pongal2024 [File Image]
தமிழகத்தில் நாளை தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இன்று தலைநகர் டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் கரகாட்டம், ஒயிலாட்டம் என பல்வேறு விதமான பாரம்பரிய கலைகள் அரங்கேற்றப்பட்டன.
காங்கிரஸ் கட்சியில் உள்ள இந்துக்கள் அயோத்தி செல்ல உரிமை உள்ளது.! ஆனால்.? சசிதரூர் கருத்து.!
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் , பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் தமிழில் பொங்கல் நல்வாழ்த்துக்கள் கூறிய பிரதமர் மோடி,
” தள்ளா விளையும் தக்காரும் தாழ்விலாச் ‘
செல்வரும் சேர்வது நாடு ” – எனும் திருக்குறளையும் கூறினார்.
மேலும் பேசிய பிரதமர், ” இந்திய இளைஞர்கள் தற்போது சிறுதானியங்களை வைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்ளை தொடங்குகின்றனர். இது பாராட்டக்கூடிய விஷயம். நன்கு கற்றறிருந்த அறிவாளிகள், நல்ல வியாபாரிகள், கடும் உழைப்பைளிகள் தான் இந்த நாட்டை முன்னோக்கி எடுத்து செல்கின்றனர் என குறிப்பிட்ட்டார்.
இந்தியாவில் கொண்டாடப்படும் ஒவ்வொரு விழாக்களுக்கும் விவசாயிகளுடன் தொடர்பு உள்ளது. தமிழ் பெண்கள் புள்ளி வைத்து கோலம் போடுவது மகத்துவம் வாய்ந்தது. அதில் பல வண்ணங்கள் கொண்டு நிரப்புவது பெரிய கலையாக உள்ளது. பல்வேறு புள்ளிகள் ஒன்றினையும் போது அந்த கோலம் மிக அழகானதாக மாறுகிறது. அதுபோல தான் இந்திய கலாச்சாரமும் என கூறினார். அவ்வாறு மக்களை ஒன்றிணைக்க தான் சவுராஸ்ட்டிரா தமிழ் சங்கம், காசி தமிழ்ச்சங்கம் ஆகிவை செயல்படுத்தி வருகிறோம் என பிரதமர் மோடி பொங்கல் விழாவில் பேசினார்.
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…