கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் பிரதமர் மோடி.! ஆச்சரியமடைந்த கைவினைக் கலைஞா்கள்.!

Default Image
  • டெல்லி ராஜபாதையில் மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகம் சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஹுனா் ஹாட் என்னும் கைவினை பொருட்கள் கண்காட்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

டெல்லி ராஜபாதையில் மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகம் சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஹுனா் ஹாட் என்னும் கைவினை பொருட்கள் கண்காட்சி பிப்ரவரி 13-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. இது கௌஷல் கோ காம் என்ற கைவினை உற்பத்தி நிறுவனத்தின் கட்டுபாட்டில் உள்ள ஹுனா் ஹாட் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பின்னர் இதில் நாடு முழுவதும் இருந்து சிறந்த கைவினை கலைஞர்கள் மற்றும் சமையல் நிபுணர்கள் கலந்துகொண்டனர். சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் முன்முயற்சியாக இந்த  பொருள்கட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு சிறிய அளவிலான கைவினை கலைஞா்கள் தங்கள் கிராமங்களில் இருந்து தயாரித்துக் கொண்டு வரும் பொருள்களை இந்த பொருள்கட்சியில் சந்தைப்படுத்துவதே இதன் சிறப்பம்சமாக இருக்கிறது. இது வெகுவாக பொதுமக்களை கவர்ந்துள்ளது. இவ்வளவு சிறப்புமிக்க பொருள்கட்சிக்கு தினமும் ஏரளமான மக்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், திடீரென பிரதமர் மோடி அங்கு வந்த கைவினைக் கலைஞர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கிட்டத்தட்ட சுமார் 50 நிமிடங்கள் வரை கண்காட்சியில் செலவிட்ட பிரதமர் மோடி லிட்டி சோகா எனும் சிற்றுண்டியினை ருசித்தார். பின்னர் அங்கிருந்த கைவினைப் பொருட்களை பார்வையிட்டும், அது பற்றி கைவினைக் கலைஞர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் இதை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்