PM Modi [File Image]
மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பர் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வரவுள்ளது. தேர்தல் நெருங்கும் வேலை என்பதால் பிரதான ஆளும் கட்சி பாஜக , எதிர்க்கட்சி காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்தியப் பிரதேசம், ஜபுவா மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், ‘ காங்கிரஸ் கட்சி எப்போதும் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பார்க்கிறது. ஆனால், பாஜக பட்டியலின, பழங்குடியினர் சமூகத்தினரின் நலனை கருத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் தோல்வி… இனி அதிர்ஷ்டம் தான் கைகொடுக்கணும்.! பிரதமர் மோடி பேச்சு.!
இரட்டை இயந்திர அரசு (பாஜக) பழங்குடியின சமூகத்தின் வாழ்க்கையை மாற்ற பாடுபட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் கூட பழங்குடியின சமூகம் காங்கிரசுக்கு எதிராகவே உள்ளது. காங்கிரஸுக்கு எதிரான கோபத்தில் மக்கள் உள்ளனர். மக்கள் எப்போதும் பாஜகவுக்கு ஆதரவாகவே உள்ளனர்.
பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த மகளை (குடியரசு தலைவர் திரௌபதி முர்மு) நாட்டின் உயரிய பதவியில் அமர வைத்துள்ளோம். பழங்குடியின கலாச்சாரத்திற்கு பாஜக என்றும் மரியாதை அளிக்கிறது. இதற்காக பழங்குடியின மக்கள் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கு நினைவிடங்களை பாஜக கட்டி வருகிறது. பிர்சா முண்டா பிரபுவின் பிறந்தநாளை பழங்குடியினரின் பெருமை தினமாக நாடு முழுவதும் கொண்டாட வேண்டும். கொரோனா காலத்தில் கூட பாஜக மக்களை கடவுள் பார்த்து கொள்வார் என்று விட்டுவிடவில்லை என்றும் பிரதமர் மோடி மத்திய பிரதேச பிரச்சார கூட்டத்தில் உரையாற்றினார்.
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…