Election2024 : பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மீண்டும் காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி பற்றி விமர்சனம் செய்துள்ளார். .
7 கட்டங்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. தேர்தல் சமயம் என்பதால் தேசிய கட்சிகளான பாஜக , காங்கிரஸ் கட்சியினர் தங்கள் தேர்தல் பரப்புரைகளில் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், சம பகிர்வு என்ற தலைப்பின் கீழ் , சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு, அதில் அனைத்து சமூகத்தினரின் வாழ்க்கை தரம், பொருளாதார நிலை ஆகியவை கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் , நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் அதிக நிலம் வைத்துள்ளவர்களின் நிலங்கள் கணக்கிடப்பட்டு அவை நிலமில்லா ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனை குறிப்பிட்டு , பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில், காங்கிரஸார் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்களை பறித்து அதிக பிள்ளைகள் பெற்றவர்களுக்கு கொடுக்க பார்க்கிறார்கள். உங்கள் சொத்துக்களை கண்காணிக்க பார்க்கிறார்கள் என்றும், பெண்களின் தங்கத்தை கூட கணக்கெடுப்பார்கள் என பல்வேறு விமர்சங்களை முன்வைத்து வந்தார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், நாங்கள் (காங்கிரஸ்) எங்கள் தேர்தல் அறிக்கை பற்றி உங்களிடம் விளக்கி கூற விரும்புகிறோம். ஏதேனும் ஒரு வார்த்தையை தவறாக புரிந்து கொன்டு அதனை கொண்டு மக்களிடம் தவறான பிரச்சாரம் செய்வதே உங்கள் வேலையாக போய்விட்டது என விமர்சனம் செய்து விளக்கம் கூற கார்கே , பிரதமர் மோடியிடம் நேரம் ஒதுக்கி கேட்டு இருந்தார்.
இந்நிலையில், இன்று பீகாரில் பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி மீண்டும் அதே விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இன்று அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சி பரம்பரை வரி விதிப்பதன் மூலம், காங்கிரஸும் ராஷ்டிரிய ஜனதா தளமும் உங்களின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள்.
இந்த தேர்தல் அறிக்கை, நாடு முழுவதும் மக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் வயதான பெற்றோரும் கவலையடைந்துள்ளனர். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை இறந்த பிறகும் கொள்ளையடிப்பார்கள். இந்தத் திட்டத்தில் காங்கிரஸுடன் தோளோடு தோள் நின்று ராஷ்டிரிய ஜனதா தளம் செயல்பட்டு வருகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பீகாரில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் தேர்தலை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…