இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 7 நாடுகளின் முன்னாள் பிரதமர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் இந்தியா வந்தனர். இந்த மாநாட்டில் உலகளாவிய சவால்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை செய்தனர். இதை தொடர்ந்து, 100 நாடுகளில் இருந்து 700 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இதில், ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஈரான் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான செர்ஜி லாவ்ரோவ் ஜனவரி 15ம் நாளான இன்று இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிவிடுள்ளார், அதில், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த உரையாடல் எங்களின் நீண்டகால நட்பை பிரதிபலித்தது. இவ்வாறு அந்த பதிவில் கூறியிருந்தார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…