நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்!
நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோ, வாரணாசி மற்றும் குஷிநகர் ஆகிய மூன்று இடங்களிலும் சர்வதேச விமான நிலையம் பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கப்பட்டு, செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், நான்காவதாக அயோத்தியில் ஒரு விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஐந்தாவதாக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் சர்வதேச விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையம் 2024 ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும் எனவும், 34 ஆயிரம் கோடி செலவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலமாக ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விமான நிலைய பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற உள்ளது.பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்ட உள்ளார். இது தொடர்பாக பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், நவம்பர் 25 உள் கட்டமைப்பு உருவாக்கத்தில் இந்தியா மற்றும் உத்தர பிரதேசத்தில் முன்னேற்றங்களுக்கு ஒரு முக்கியமான நாள். மதியம் ஒரு மணிக்கு நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்படும். இந்த திட்டம் வர்த்தகம், இணைப்பு மற்றும் சுற்றுலாவை கணிசமாக மேம்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Tomorrow, 25th November is a major day for India’s and Uttar Pradesh’s strides in infra creation. At 1 PM, the foundation stone of the Noida International Airport will be laid. This project will significantly boost commerce, connectivity and tourism. https://t.co/8sSa8R1aFl
— Narendra Modi (@narendramodi) November 24, 2021