கரிப் கல்யாண் ரோஜ்கர் திட்டத்தை தொடங்கி பிரதமர் மோடி
பிரதமர் மோடி கரிப் கல்யாண் ரோஜ்கர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் வெளிமாநிலங்களில் வேலை பார்க்கும் பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இந்த சமயத்தில் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வேலை இன்றி தவித்தனர்.இதனிடையே புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.புலம் பெயர் தொழிலாளர்கள், பல்வேறு திட்டங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது.Garib Kalyan Rojgar Abhiyaan என்ற திட்டத்தை பிரதமர் ஜூன் 20-ஆம் தேதி (இன்று ) தொடங்கி வைக்கிறார் .புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களில் பணிபுரிய புதிய திட்டம் வகுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி கரிப் கல்யாண் ரோஜ்கர் திட்டத்தை காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் பிகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய மாநில தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.