பிரதமர் கிசான் திட்டம் : விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.6,000 நிதியுதவி…! இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…!

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை இன்று 11 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக, பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை இன்று 11 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக, பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடலிலும் ஈடுபடுவார். இந்த விழாவில் மத்திய வேளாண் அமைச்சரும் கலந்து கொள்வார்.
இதன்படி இந்தத் திட்டத்தின் கீழ் 9.5 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவர். விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த, சுமார் 19,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகளின் வங்கி கணக்கில், மூன்று தவணையாக பணம் பரிமாற்றம் செய்யப்படும்.
2020-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதியன்று சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு 18,000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 10.5 கோடி. ஆனால் கட்டாய ஆதார் அங்கீகாரத்தை அமல்படுத்திய பின், 9.5 கோடி விவசாயிகள் மட்டுமே இந்த சலுகையை பெறுவதற்கு உகந்ததாக கருதப்பட்டனர். இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ. 1.15 லட்சம் கோடி நிதி உதவி, விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.