#PM-KISAN: விவசாயிகளுக்கு ரூ.16,000 கோடி பிஎம் கிசான் நிதியை விடுவித்தார் பிரதமர்!
விவசாயிகளுக்கு 12-வது தவணையாக ரூ.16,000 கோடி பிஎம் கிசான் நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி.
டெல்லியில் நடைபெற்ற கிசான் சம்மான் சம்மேளன் 2022 மாநாட்டில் பிரதமர் கிசான் நிதியின் 12வது தவணையாக ரூ.16,000 கோடியை சுமார் 12 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு பிரதமர் மோடி விடுவித்தார். நாடு முழுவதிலும் இருந்து 13,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் 1500 வேளாண் தொடக்க நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றன. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
3 தவணைகளில் தலா ரூ.2,000 வீதம் இந்த நிதி உதவி விவசாயிகளின் நேரடி வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு இதுவரை ரூ.2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விவசாயிகளுக்கு 12-வது தவணையாக ரூ.16,000 கோடி பிஎம் கிசான் நிதியை விடுவித்தார். விவசாயிகள் தங்கள் ஆதார் கார்டை, கிசான் கணக்குடன் இணைத்திருக்கும் பட்சத்தில் அவர்களின் வங்கிக்கணக்கிறக்கு நேரடியாக உதவித்தொகை பரிமாற்றம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.