நாடு முழுவதும் மாணவர்களை சந்திக்க பிரதமர் மோடி முடிவு.. மகிழ்ச்சியில் மாணவர்கள்..

Default Image
  • தேர்வு குறித்த மன அழுத்தத்தை குறைக்க புதிய முயற்ச்சி.
  • நாடு முழுவதும் உள்ள மாணவர்களை சந்திக்க முடிவு.

நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு  ஆண்டு இறுதி தேர்வு வரும் மார்ச் மற்றும்  ஏப்ரல் மாதங்களில்  நடைபெறவுள்ளது.இந்நிலையில் இந்த தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாரத பிரதமர் மோடி மானவர்களை  சந்தித்து அறிவுரைகளை கூறி வருகிறார்.இந்த வகையில், இந்த ஆண்டுக்கான இந்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள தால்கடோரா அரங்கத்தில் வரும் 20-ம் தேதி வார விடுமுறை நாளில் நடைபெறவுள்ளது.

Image result for modi in students

இந்த, பிரதமர் மோடியின் மாணவர்களுடனான சந்திப்பிற்கு  நாடு முழுவதிலும் இருந்து சுமார்  2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் நாட்டிலேயே  முதன்முறையாக 50 மாற்றுத்திறனாளி மாணவர்களும் பங்கேற்கவுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்க பிரதமர் மோடி எக்சாம் வாரியர் என்ற புத்தகத்தை எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்