உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக ரயில் – நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
306 கி.மீ தூர உடைய புதிய ரெவாரி-புதிய மதார் பிரிவை காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்த நிகழ்ச்சியின் போது, புதிய அட்டலி-புதிய கிஷன்கர்க் வரையிலான மின்சாரத்தால் இயங்கும் உலகின் முதல் இரட்டை அடுக்கு 1.5 கி.மீ நீள பெட்டக ரயிலையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ராஜஸ்தான், அரியானா மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகிழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், கடந்த 5-6 ஆண்டுகளில் இந்தியாவின் கடின உழைப்பு பலனளிக்கிறது.2021 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய ஆண்டில் நாட்டின் அறிமுகம் சிறப்பாக இருக்கும்போது, அது வரும் காலங்களில் இன்னும் கண்கவர் காட்சியாக இருக்கும்.
அட்டலியில் இருந்து கிஷன்கர்க் வரை 1.5 கி.மீ நீளமுள்ள சரக்கு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இன்று இந்தியா ஒரு சில நாடுகளில் தனது இருப்பை பதிவு செய்து வருகிறது.இன்று விவசாயிகள், தொழில்முனைவோர், ஹரியானா மற்றும் ராஜஸ்தானின் வர்த்தகர்களுக்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது என்று பேசியுள்ளார்.