இந்தியாவில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கிய நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி, காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தியாவில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக, தினசரி பாதிப்பு 30,000-ஐ கடந்துள்ள நிலையில், கொரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி போடும் பணிகளை மாநில அரசு விரைவுபடுத்தும் பணிகள் குறித்து பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்களுடன் காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்தும், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் பிற மாநிலத்தை விட தமிழகத்தில் குறைந்துள்ளதாகவும், இதனால் சுகாதார பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த கூட்டம் முடிவடைந்த பின், மாலை 4:00 மணிக்கு சென்னையில் உள்ள தேசிய ஊடக மையத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் மற்றும் உள்துறை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்து இந்தியளவில் கொரோனா பாதிப்பு குறித்தும், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்பது குறித்து பேசவுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முதல்வர்கள் கலந்துகொள்ளவில்லை என்றும், இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…